• Nov 19 2024

முதுகில் குத்தியவர்களை நினைக்கக் கூடாது- திருமணம் நின்ற காரணம் குறித்து முதன் முறையாக பேசிய விஷால்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் சினிமாவில் புரட்சித் தளபதி என்ற பட்டத்தோடு முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஷால்.இவரது நடிப்பில் லத்தி என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் இந்த மாதம் 22ம் திகதி வெளியாகவுள்ளதால் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பேட்டியில் கலந்து கொண்ட விஷாலிடம் தொகுப்பாளர் உங்களுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த நிச்சயதார்த்தம் நின்றமைக்கான காரணம் என்ன என்று கேட்கப்பட்டது. அந்த பேட்டியில் திருமணம் நின்றதற்க்கான காரணத்தை கூறியிருந்தார்.

திருமண நிச்சயதார்த்தம் நடந்த 2019ஆம் ஆண்டு என் வாழ்க்கையிலேயே மிகவும் மோசமான வருடம். நான் பல முறை என்னுடனேயே பேசிக்கொள்வேன் அதனால் பல பேர் இவன் என்ன பைத்தியமா என்றெல்லாம் நினைத்ததுன்டு. நானே தான் என்னுடைய இந்த நிலைமைக்கு காரணம். நான் எந்த காரியம் எடுத்தாலும் அதனை கண்டிப்பாக முடித்து விடுவேன். ஆனால் அதுவே என்னுடைய ஒரு பலவீனமும் கூட. நிச்சயதார்த்தம் முறிந்த போது அதற்காக கவலை படவில்லை மாறாக என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை என்ற நல்லதை மட்டுமே எடுத்துக்கொண்டேன்.

ஏனென்றால் நடந்ததை நினைத்து வருந்துவதில் எந்தவொரு பிரயோஜனமும் இல்லம். இப்படி இருந்ததினால் தான் கடந்த 18 வருடங்களாக சினிமாவில் நடிகனாக என்னால் வாழ முடிந்தது. இந்த 18 வருடங்களில் பல முதுகில் குத்திய நபர்களை நான் பார்த்திருக்கிறேன் என்று கூறினார் விஷால். அதற்கு பின்னர் நெறியாளர் நீங்கள் ஒரு பிரபலமான நடிகர் என்பதினால் இந்த விஷயத்தை மக்கள் சரி என்று இருந்து விடுவார்கள் ஆனால் இதனால் ஒரு பெண்ணிற்கு சில பிரச்சனைகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரிந்ததா என்று நடிகர் விஷாலிடம் நெறியாளர் கேட்டிருந்தார்.


அதற்கு பதிலளித்த விஷால் `இந்த நிச்சயதார்த்தம் நின்ற விஷயம் இரண்டு பேரின் சம்மதத்தில் தான் நடந்தது. ஒருவேளை காதலித்து ஏமாற்றியோ அல்லது அந்த பெண் ஒப்புக்கொண்டும் நான் நிச்சயதார்த்தத்தை நிறுத்தியிருந்தாலோ அது எனக்கு மன உறுத்தலாக இருந்திருக்கும். ஆனால் அந்த மாதிரியான விஷியங்கள் நடைபெறவில்லை, நாங்கள் இருவரும் சம்மதித்த பின்னர்தான் பிரிந்தோம் இதனால் இந்த நிகழ்வை அதனுடன் ஒப்பிட முடியாது என்று தன்னுடைய நிச்சயதார்த்தம் நின்றதற்கான காரணத்தை கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement