• Nov 12 2024

முடிந்தது ஊழல் விவகாரம்... முற்றுப்புள்ளி வைத்த அரசாங்கம்... நன்றி தெரிவித்த விஷால்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

மும்பையில் உள்ள இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் ஊடான ஊழல் புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கும் , மஹாராஷ்ரா முதல்வருக்கும் நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். மும்பைல உள்ள தணிக்கை திரைப்பட வாரியம் நடிகர் விஷாலின் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஹிந்தியில் வெளியிட 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் நடிகர் விஷாலின் குற்றச்சாற்று உறுதி செய்யப்பட்டதால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய திணைக்கள வாரியம் கூறிய நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு  பிரதமர் மோடிக்கும் , மஹாராஷ்ரா முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


"மும்பையில் ஊழல் விவகாரம் தொடர்பான இந்த முக்கியமான விஷயத்தில் உடனடி நடவடிக்கைகளை எடுத்ததற்காக .எடுக்கப்பட்ட தேவையான நடவடிக்கைக்கு மிக்க நன்றி மற்றும் ஊழலில் ஈடுபடும் அல்லது ஊழலின் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும், ஊழலின் படிகள் அல்ல, தேசத்திற்கு சேவை செய்ய நேர்மையான பாதையில் செல்வதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகிறேன். எனது பிரதமருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் நரேந்திர மோடிமற்றும் மகாராஷ்டிர முதல்வர் மிக்நாத்ஷிண்டே மற்றும் இந்த முயற்சியை உடனடியாக வெளிக்கொணர்வதில் ஈடுபட்டுள்ள அனைவரும். ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் என்னைப் போன்ற ஒரு சாமானியனுக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியான உணர்வைத் தருகிறது, ஜெய் ஹிந்த்." இவ்வாறு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement