• Sep 19 2024

நெற்றியில் பட்டை, கையில் துப்பாக்கியுடன் விஷால்... அதுவும் பிறந்தநாளில்... படக்குழுவினர் கொடுத்த ட்ரீட்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் விஷால். இவரின் நடிப்பில் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அத்தோடு இந்தப் படத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார்.

மேலும் இந்தப் படத்தில் விஷால் மற்றும் எஸ்.சூர்யா ஆகிய இருவருமே இரட்டை வேடங்களில் நடித்து பட்டையைக் கிளப்பி வருகினர். இவர்களோடு இணைந்து நடிகை ரித்து வர்மாவும் நடித்து வருகிறார். 


தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கும் இப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இந்தப் படத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 

அத்தோடு இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆனது இரண்டு வெவ்வேறு காலக்கட்டத்தில் நடப்பது போன்று அமைகின்றது. அதாவது 1970-களில் நடப்பது போன்றும், தற்போது நடப்பது போன்ற கதைக்களத்திலும் உருவாகிறது.

ரசிகர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியினைக் கொடுக்கும் வகையில் விஷால் இந்தப் படத்தில் முற்றிலும்  மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. 


இந்நிலையில் தற்போது 'மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கின்றது. அதில் விஷால் முதன்முறையாக தாடியுடன் மிரட்டலான தோற்றத்தில் காணப்படுகிறார். அதுமட்டுமல்லாது நெற்றியில் பட்டை, கையில் துப்பாக்கி என மாஸ் காட்டும் வகையில் காட்சி அளிக்கின்றார். 


அந்த வகையில் இன்று விஷால் பிறந்ததினம் என்பதால் அவருக்கு பிறந்தநாள் ஸ்பெஷல் ட்ரீட் ஆக இந்தப் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்போஸ்டர் ஆனது வெளியாகி விஷாலிற்கு மட்டுமன்றி அவரின் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.   

Advertisement

Advertisement