• Sep 20 2024

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் என்ட்ரி கொடுத்த விஷாலின் மகள்- இந்த சர்ப்ரைஸை யாரும் எதிர்பார்க்கலையே...

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர்  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.இந்தப் படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். விஷாலின் 33வது படமான இப்படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.

டைம் ட்ராவலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படமானது செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியாகவுள்ளது.மேலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நடிகை சில்க் ஸ்மிதாவையும் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் படத்தில் ஏதேனும் வித்தியாசம் இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர்.


இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் விஷால் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.அத்தோடு இதில்  ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க வைத்த மாணவியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய விஷால், "எனக்கு ஒரு விண்ணப்பம் வந்தது. அதில் ஒரு மாணவி தனக்கு பி.ஏ.இங்கிலீஷ் படிக்க வேண்டும். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் முதல்வருக்கு ஃபோன் செய்தேன். அதுவரை அவர் எனக்கு அறிமுகம் கிடையாது. இருந்தாலும் நான் விஷயத்தை சொன்னேன். அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு முடியாது என்று சொல்லி விட்டார். அப்போது நான், மேடம் நீங்கள் ஒரு செமஸ்டர் மட்டும் பாருங்கள். எனது குழந்தை நல்ல மார்க் எடுத்து ஃபர்ஸ்ட் வருவா ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றேன். சரி நாளைக்கு ஃபோன் பண்ணுங்க என்று சொல்லிவிட்டார். 

 மறுநாள் ஃபோன் செய்தேன். அப்போது அந்த முதல்வர், 'நீங்கள் சொன்னபடி ஒரு செமஸ்டர்தான் பார்ப்பேன். நல்ல மார்க் எடுக்கவில்லை என்றால் என்னை மன்னித்துவிடுங்கள் விஷால்' என்றார். கண்டிப்பாக வாங்குவா மேடம் என்று உறுதி கொடுத்தேன். அந்த மாணவி நான் சொன்னபடியே முதல் செமஸ்டரில் வகுப்பில் முதல் இடம் பிடித்துவிட்டார். 

அந்த மாணவி என்னுடைய மகள்தான். பிறகு ஒருநாள் மீண்டும் என்னை அழைத்த ஸ்டெல்லா மேரீஸ் முதல்வர் விஷால் அடுத்த வருடத்திலிருந்து உனக்கு இரண்டு சீட் தருகிறேன் என உறுதியளித்தார்" விஷாலைத் தொடர்ந்து பேசிய அந்த மாணவி, "கன்னியாகுமரியை சேர்ந்த எனக்கு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க முடியுமா என்ற ஏக்கம்  இருந்தது. 


அதை விஷால் அண்ணாதான் நிறைவேற்றி வைத்தார். அதுமட்டுமின்றி போர்ச்சுகலுக்கு ஒரு ட்ரிப் சென்றிருந்தேன். அதற்கும் இவர்தான் பணம் கொடுத்தார். மேலும் செலவுக்கும் பணம் கொடுத்தார். அங்கு சென்று சேர்ந்த பிறகும் எனக்கு ஃபோன் செய்து எல்லாம் ஓகேதானே என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் எனக்கு அப்பா மாதிரிதான்" என்று எமோஷனலாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement