தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அப்பாஸ். பல படங்களில் நடித்த அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளமானோர் இருந்தனர். ஆனால் திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. மேலும் பட வாய்ப்பு சுத்தமாக இல்லாமல் வெளிநாடுக்கு சென்று அங்கு செட்டிலும் ஆகிவிட்டார். இந்தச் சூழலில் அவர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
அந்த பேட்டியில், "செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியின் போது, எனக்கும் விஷாலுக்கும் பிரச்சனை ஏற்பட்டது உண்மை தான். ஆனால் நான் அதற்காக வெளிநாட்டிற்கு போகவில்லை. அந்த சமயத்தில் நான் சில விழாக்கள், ஈவெண்ட்டுகளை எடுத்து நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது தான் சிசிஎல் நடத்துவது பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். சிசிஎல் நடத்த ஸ்பான்சர் கிடைக்கவில்லை. எனவே போட்டியை நிறுத்திவிடலாம் என்று திட்டமிட்டார்கள்.
வேண்டாம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொடங்குங்கள் என்று கூறிவிட்டு, பாம்பேயில் நான் சல்மான் கானிடமும், ஆந்திராவில் நடிகர் வெங்கடேஷிடமும், கர்நாடகாவில் நடிகர் சுதீப்பிடமும் இது பற்றி பேசி பாலிவுட் vs தென் இந்தியா என்ற அடிப்படையில் முதலில் போட்டி நடத்தினோம். இதனை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என்றும் கூறியிருந்தோம்.
அந்தப் போட்டியை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினார்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது .
2 முறை சிசில் போட்டியில் நான் பங்கேற்றேன். மூன்றாவது முறை வெளியேறிவிட்டேன். அதற்கு காரணம் விஷால்தான். சரியாக என்னை அவர் நடத்தவில்லை. அதற்கு காரணம் என்ன என்பதும் தெரியவில்லை. ஆனால் யாரோ அவரின் தலையில் விஷத்தை ஏற்றிவிட்டனர்.
அதனால் அவர் என்னை தவறாக புரிந்துகொண்டு மற்றவர்களிடமும் என்னை பற்றி தவறாக கூறி வந்தார். அதனால் நான் அதிலிருந்து விலகிவிட்டேன். நான் எல்லா மாநில நடிகர்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று மட்டும் தான் நினைத்தேன். இந்த பிரச்னையால் அணியில் சகோதரத்துவன், கலகலப்பு எல்லாம் போய்விட்டது. எனவே நானும் வெளியேறிவிட்டேன். அதன் பிறகு விஷாலிடம் பேசவே இல்லை" என கூறியிருந்தார்.
Listen News!