தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் விஷால். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய வீரமே வாகை சூடும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இருப்பினும் இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியினைப் பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து விஷால் 'லத்தி' என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கியுள்ளார். விஷாலின் நெருங்கிய நண்பர்கள், ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில், லத்தி படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநருக்கே தெரியாமல் தயாரிப்பாளர் நந்தா, ரமணா மற்றும் விஷால் வெளியிட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இப்படத்தின் அறிவிப்பு பற்றி இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடவில்லை. இதனால் இவ்வாறு வெளியாகியுள்ளதா? என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!