கடந்த 2018ம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ராட்சசன்.சைக்கோ த்ரில்லர் பாணியில் வெளியான இப்படத்தை இயக்குநர் ராம்குமார் இயக்கியிருந்தார்.இப்படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்ததோடு விஷ்ணு விஷாலுக்கு நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது.
இதனை அடுத்து விஷ்ணுவிஷால் மீண்டும் ராம்குமாரின் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது கொடைக்கானலில் நடத்தப்பட்டுள்ளது. இந்த சூட்டிங் தொடர்ந்து 20 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதைக்களமே கொடைக்கானல்தான் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
சத்யஜோதி பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் மொத்தமாகவே 6 கேரக்டர்கள் மட்டுமே நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமாவில் தொடர்ந்து த்ரில்லர் வகைப் படங்கள் வெளியாகி வருகின்றன. இருந்தபோதிலும் இவற்றில் ஒருசில படங்களே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, வசூலையும் குவித்து வருகின்றன.
அந்த வகையில் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியான காட்சி அமைப்பை வைத்து, தற்போதும் சைக்கோ த்ரில்லர் படத்திற்கு பெஸ்ட் உதாரணமாக உள்ள படம் ராட்சசன். இந்தப் படத்தின் கூட்டணி மீண்டும் த்ரில்லர் பாணி கதைக்காக இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
Listen News!