• Sep 20 2024

டபுள் மடங்கு வசூலை வாரிக்குவித்த விஷ்ணு விஷால்... அதுவும் இந்தப்படத்திலா... அடடே இது தெரியாமல் போச்சே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த  'வெண்ணிலா கபடி குழு' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாக்கினார். அதனைத் தொடர்ந்து 'ஜீவா, இடம் பொருள் ஏவல், இன்று நேற்று நாளை' உட்பட ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.


எனினும் இவரது திரைப்பயணத்தில் சில சிறந்த படங்களும் உள்ளன. அதில் ஒன்று தான் 'ராட்சசன்'. இப்படமானது ராம்குமார் என்பவர் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து அமலா பால், சரவணன் என நிறைய பேர் நடித்திருந்தார்கள்.

மேலும் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தை மையமாகக் கொண்டு தயாரான இந்த திரைப்படம் சமூகத்தில் நடக்கும் முக்கியமான விஷயத்தை பற்றி பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நல்ல வசூல் வேட்டை நடத்திய இப்படம் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இப்படம் குறித்த தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. அதாவது இப்படமானது ரூ. 5 முதல் ரூ. 8 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாராகி இருந்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் படம் முடிவில் ரூ. 50.54 கோடி வரை டபுள் மடங்கு வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement