• Sep 20 2024

விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படம் முதல் நாளில் இத்தனை கோடி வசூலா!

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஷ்ணு ஓர் இந்தியத் திரைப்பட நடிகராவார். மேலும் இவர் தமிழ்த் திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவர் வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். 


அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரரான இவரை சினிமா பக்கம் வந்துவிட்டார். நடிப்பு என்பதற்கான எந்த பயிற்சியும் எடுக்கவில்லை என்றாலும் சிறந்த நடிகராகவே இப்போது உள்ளார்.


அதுமட்டுமல்லாமல் ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதா நாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.


இந்நிலையில் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க நேற்று வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. FIR என்ற மாபெறும் வெற்றிப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் இப்படம் வெளியாகியுள்ளதால் மக்களும் படத்திற்கு நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.


ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாள் முடிவில் ரூ. 2 கோடி வரை வரை வசூலை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement