• Sep 20 2024

விஷ்ணு விஷால் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்! 2nd PART குறித்து வெளியான தகவல்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.இவர் வெண்ணிலா கபடிக்குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல படங்களில் நடித்து வெற்றிகளை கொடுத்ததோடு, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதா நாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட  படங்களையும் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜாவின் ’RT டீம்வொர்க்ஸ்’ நிறுவனம் தயாரித்தது.



இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், கட்டா குஸ்தி படத்தின் பிஸினஸ் 30+ கோடிக்கும் மேல் வியாபாரத்தை தாண்ட உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த வருடத்தில் FIR & கட்டா குஸ்தி இரண்டு படங்களும் வெற்றி படமாக அமைந்துள்ளது என சந்தோசத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த FIR படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது என விஷ்ணு விஷால் அதிகாரப்பூர்வமாக ட்வீட் செய்துள்ளார். விரைவில் இந்த படம் குறித்து படக்குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டா குஸ்தி படத்திற்கு முன் விஷ்ணு விஷால் நடிப்பில் 'எஃப்ஐஆர்' படம் வெளியானது.‌



இப்படம் கடந்த ஆண்டு 2022 பிப்ரவரி 11 அன்று உலகம் முழுவதும் வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ்  இப்படத்தை வெளியிட்டது. பைசல் இப்ராஹிம் ரெய்ஸ் என்பதின் சுருக்கமே FIR. விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் மனு ஆனந்த் இயக்கினார்.‌

இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்தனர். இயக்குநர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement