தமிழ் சினிமாவில் பல போராட்டங்கள் மற்றும் அவமானங்களைக் கடந்து முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் விஜய். இவரது நடிப்பில் தற்பொழுது லியோ என்னும் படம் உருவாகி வருகின்றது. அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகின்றார்.
இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த ஏனைய அறிவிப்புக்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் விஜய் குறித்து புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது விஜய் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் திருமலை.
ரமணா இயக்கத்தில் உருவான இப்படத்தை படக்குழு இயக்குநர் பாலச்சந்தரிடம் போட்டு காட்டி அவரிடம் கருத்து கேட்டது. அதற்கு அவர் ‘படம் ஓகே. ஆனால், காமெடியே இல்லை. விவேக்கை வைத்து சில காமெடி காட்சிகளை எடுத்து படத்தில் சேர்த்துவிடுங்கள். படம் ஹிட்டாகும்’ என அவர் சொல்ல ரமணாவும் அப்படியே செய்தார்.
படமும் வெளியாகி விஜய்க்கு ஹிட் படமாக அமைந்தது. இப்படத்தின் காமெடியும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. அதன்பின் கில்லி, திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்களில் நடித்து விஜய் மீண்டும் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டார். அதேபோல் விஜய்யுடன் குஷி, உதயா, ஆதி, பிகில் உள்ளிட்ட பல படங்களிலும் விவேக் நடித்துள்ளார்.
ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது தனி நபரை மட்டுமே சார்ந்தது இல்லை. அது ஒரு கூட்டு முயற்சி என்பதற்கு ‘திருமலை’ படமே ஒரு பெரிய உதாரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!