• Sep 20 2024

விஜய்டிவி சீரியல் கை விட்டாலும் யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வரும் வி ஜே தீபிகா- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜேவாக அறிமுகமாகியவர் தான் தீபிகா. ஆரம்பத்தில் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்த இவர் பரியேறும் பெருமாள் படத்தில் நாயகிக்கு தோழியாக நடித்திருந்தார். 

இதனை அடுத்தே இவருக்கு விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார்.இருப்பினும் முகத்தில் ஏற்பட்ட முகப்பரு காரணமாக திடீரென சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


இது இவருடைய ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடையச் செய்தது.இருப்பினும் சில நாட்களிலேயே தன்னுடைய முகப் பருவைக் குறைத்துக் கொண்ட இவர்  தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்

கிராமத்தை சேர்ந்த தீபிகா சோசியல் மீடியாவிலும் பிசியாக இருக்கிறார். அத்தோடு சொந்தமாக யூடியூப் சேனலும் ரன் செய்து வருகிறார். அவ்வப்போது தனது வாழ்க்கை குறித்து பதிவிட்டு வரும் இவர் தற்போது சிறிய அளவில் தனது தாய் தந்தையின் ஆசைக்கேற்ப வீடு ஒன்றை கட்டியுள்ளார். 


அதுகுறித்த பதிவையும்  அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார்.அது மட்டுமல்லாமல் இவர் ஒவ்வொரு இடத்திலும் அவருடைய அம்மா மற்றும் அப்பாவின் மீது இருக்கும் பாசத்தை அவர்களின் கனவுகளையும் அந்த வீடியோவில் விவரித்துள்ளார். இது குறித்து நீங்கள் கட்டியிருக்கும் வீடு சிறிது தான் என்றாலும் உங்களது மனசு பெரிது என்று இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement