விஜய் டிவியில் முக்கிய பிரபலங்களில் விஜே ஜாக்குலின் ஒருவர். இவர் சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் வருவதில்லை. படங்களை நடிப்பதில் பிஸியாக இருந்து வருகிறார். விஜய் டிவியில் ஜாக்குலின் ஆரம்பத்தில் அதிகமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.
ஆனால் தற்போது இவர் அதிகமாக எந்த நிகழ்ச்சிகளிலும் காணப்படாமல் இருக்கிறார். தன்னுடைய விடாமுயற்சியால் ஒவ்வொரு இடத்திலும் சாதித்து வந்த ஜாக்லின் தொகுப்பாளராக இருந்து தேன்மொழி பி ஏ என்ற சீரியலில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.
தற்போது அந்த சீரியல் முடிவடைந்து இருக்கிறது. அதற்கு பிறகு வேறு எந்த சீரியலிலும் இவர் நடிக்காமல் இருந்து வருகிறார். ஜாக்லின் YouTube சேனலில் இவர் வெளியே செல்லும் இடங்களை அப்படியே வீடியோவாக எடுத்து பதிவிட்டு வருகிறார். ஜாக்லின் தீவீரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.
அவர் புல் அப்ஸ் எடுப்பதற்காக ஜிம்மில் சபதம் எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சபதம் எடுத்த படியே இறுதியில் அவர் வெற்றிகரமாக அதை செய்து முடித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் காம்பாக் கொடுக்க போகிறார் ஜாக்லின் என கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Listen News!