• Sep 20 2024

விஜே மகாலக்ஷ்மில இவ்ளோ லவ்வா...உடம்பு முழுதும் தங்கத்தால் அலங்கரித்த ரவீந்தர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான மகாலக்ஷ்மி பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரை கடந்த முதலாம் தேதி திருமணம் செய்து கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது கல்யாணைத்தை முடித்துள்ளனர்.



திருப்பதியில் இவர்களின் திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் புடைசூழ நடைபெற்றது. மகாலக்ஷ்மிக்கும் ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணம். மகாலக்ஷ்மிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.



பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அத்தோடு விரைவில் சென்னையில் பிரம்மாண்டமாக ரிசெப்ஷன் நடத்த திட்டமிட்டுள்ள இவர்கள் தற்போது மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர்.



இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக மகாலக்ஷ்மிக்கும் ரவீந்தருக்கும் நடைபெற்ற நளங்கு போட்டோ வெளியாகியுள்ளது. இதில் கழுத்து நிறைய முழுக்க முழுக்க தங்க நகைகளுடன் நெற்றியில் குங்குமத்துடன் பிங்க் நிற பட்டுப்புடவையில் உள்ளார் மகாலக்ஷ்மி.



அத்தோடு மகாலக்ஷ்மியின் இந்த போட்டோவை பாரத்த நெட்டிசன்கள், ரவீந்தர் சாருக்கு மகாலக்ஷ்மி மீது உள்ள காதல் இதிலேயே தெரிகிறது. காதல் மனைவியை தங்களை நகைகளால் அலங்கரித்து பிரமிக்க வைத்துள்ளார் என கூறி வருகின்றனர். மகாலக்ஷ்மியின் இந்த போட்டோ லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.


Advertisement

Advertisement