தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானாவர் தான் வி.ஜே. மகேஸ்வரி.இவர் தற்போது சீரியல் திரைப்படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் கமலின் நடிப்பில் மெகா ஹிட்டான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக இவர் நடித்திருந்தார்.
எனினும் அதனைத் தொடர்ந்து இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இருந்தார்.
இவ்வாறுஇருக்கையில் இவருக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆனதால் தொலைக்காட்சி ஊடகங்களில் இருந்து விலகியிருந்தார். பின் சில காரணங்களால் அவரின் கணவரை பிரிந்த மகேஸ்வரி தனியாக மகனை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு இந்த பெரிய மகனா என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்...
Listen News!