விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் விஜே பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர், ஸ்ராட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இவர் நிகழ்ச்சியை செம ஃபன்னாக தொகுத்து வழங்கி வருவார் என்பதும் முக்கியமாகும்.
பிரியங்கா கடந்த 2014 ஆம் ஆண்டு, விஜய் டிவியில் பணி புரிந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் பிரியங்கா பிரவீனை விவாகரத்து செய்து விட்டு தனிமையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பிரியங்கா மற்றும் மாகாபா தொகுத்து வழங்கி வருகின்ற சூப்பர் சிங்கர் ஷோவானது தற்போது சிறுவர்களுக்கான ஜூனியர் சீசன் 9ஐ ஒளிபரப்பி வருகின்றது. இதில் சனு மித்ரா என்ற சிறுமி தனது இசைப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த தந்தை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் கட்ட ஆடிசனுக்கு வந்து செல்கையில் விபத்தில் இறந்துபோனார் எனக் கூறித் தனது சோகத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இதனைக் கேட்ட பிரியங்கா "என் தந்தையையும் என்னுடைய 11 வயதில் ஹார்ட் அட்டாக்கில் இழந்தேன். என் அம்மா தான் எங்களை அப்பாவைப் போல் பார்த்து கொண்டார். எது நடந்தாலும் தந்தை நம்மை எப்போதும், நம்மோடு இருந்து ஆசிர்வதிப்பார்" எனக் கூறி தனது சோகத்தையும் பகிர்ந்து சனு மித்ராவிற்கு ஆறுதல் கூறினார்.
Listen News!