விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் கலகலப்பான சமையல் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், தற்பொழுது நான்காவது சீசன் ஆரம்பித்துள்ளது.
இதில் கடந்த மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி, நான்காவது சீசனில் குக்காக அவதாரம் எடுத்துள்ளார். அதேபோல், நடிகை சரி சிருஷ்டி டாங்கே, விசித்ரா, மைம் கோபி, காளையின், விஜே விஷால், போன்ற பல பிரபலங்கள் குக்குகளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்றி வருகின்றனர்.
மேலும் இந்த முறை கோமாளிகளாக ஜி பி முத்து, தங்கதுரை, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, நடிகை ரவீனா தாகா, மணிமேகலை, சுனிதா, ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வாரம் ஃகாம்பிடிஷன் வாரம் ஆரம்பித்து. அதனால் போட்டியாளர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி பிரியாணி செய்திருந்தனர். இதில் 4 போட்டியாளர்கள் சிறப்பாக செய்து இமியூனிட்டி சேலஞ்சில் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு உருளைக் கிழங்கு கொடுக்கப்பட்டது.
இதனைப் பயன்படுத்தி ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு டிஸ் செய்திருந்தனர்.இதில் சிறப்பான ஒரு டிஸ்ஸை பாக்கியலட்சுமி சீரியல் விஷால் செய்திருந்தார். அவருக்கு கோமாளியாக குரேஷி செயற்பட்டார். இதனால் விஷாலுக்கு இமியூனிட்டி பான்ட் வழங்கப்பட்டு வைக்கப்பட்டதோடு பிரிஜ் உட்பட இன்னும் பல கிப்ட்டுக்கள் கிடைத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!