தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் , காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், DSP ஆகிய படங்கள் வெளியானது. விஜய் சேதுபதி நடித்து இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர், விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் புகழ் பெற்ற இயக்குநர்களான ராஜ் - டிகே இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் Farzi தொடர் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ளனர்.
மேலும் இந்தத் தொடரில் கே. கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பிரபல மெமிக்ரி கலைஞர் TSK எனும் திருச்சி சரவணகுமார் டப்பிங் பேசியுள்ளார். இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை அவரது வீட்டிற்கு சென்று TSK சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் விஜய் சேதுபதி தனது கைப்பட எழுதிய வாழ்த்தும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான TSK தமது பதிவில், "லைஃப் டைம் செட்டில்மென்ட் டா மொமன்ட் 🔥 உங்களின் நேரத்திற்கும், உங்கள் அணைப்பிற்கும் , உங்கள் பாராட்டுக்கும், நேர்மறையான வார்த்தைகளுக்கும் நன்றி விஜய் சேதுபதி அண்ணா ❤️ farzi டப்பிங் ஒரு சிறந்த அனுபவம் அண்ணா ❤️ என் டைரியில் உள்ள வார்த்தைகளுக்காக உங்களை மிகவும் நேசிக்கிறேன் ❤️" என TSK பதிவிட்டுள்ளார்.
TSK டைரியில் நடிகர் விஜய் சேதுபதி, " உன்னை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. நன்றி நன்றி நன்றி உன்னுடைய டப்பிங் பர்சி தொடரில் மிக அருமை. வாழ்க நீ. உன்னுடைய அறிவும் பண்பும் திறமையும் உன்னை மேன்மேலும் வளர்க்கும். நீ நினைக்கும் இடத்தை அடைவாய் வாழ்த்துக்கள்." என டைரியில் விஜய் சேதுபதி எழுதியுள்ளார்.
Listen News!