தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்யாசமான கதைகளை இயக்கி வரும் இயக்குநர் ராஜு முருகன், இவரது இயக்கத்தில் தற்பொழுது ஜப்பான் என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இதுவரை ராஜு முருகன் இயக்கிய படங்களிலேயே இப்படம் மிகவும் வித்தியாசமாக இருப்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கார்த்தி நடித்துள்ள 'ஜப்பான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக, அண்மையில் அறிவிப்பு ஒன்று வெளியானது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் இந்த படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ் ஆர் பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, ரவிவர்மன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் கார்த்தி அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.அந்த வகையில் தற்பொழுது கார்த்தி நடிகர் சந்தானத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ஆல் இன் அழகுராஜா படத்திற்காக எடுக்கப்பட்டதாகும்.
இதனைப் பதிவிட்டு கார்த்தி வாடி என் கரீனா சொப்ரா என்று பதிவிட்டுள்ளார். இதனைத் பார்த்த ரசிகர்கள் சந்தானத்துடன் மீண்டும் இணைந்து நடிக்கப் போகின்றீர்களா என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!