கோலிவுட் வட்டாரத்தில் தினமும் பேசிக்கொண்டிருந்த தலைப்பில் ஒன்று வாரிசு மற்றும் துணிவு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பதை பற்றி தான்.இதில் உலகளவில் துணிவு படத்தை விட வாரிசு படம் அதிக வசூல் செய்து வருகிறது. ஆனாலும் சில முக்கிய இடங்களில் வாரிசு படத்தை துணிவு படம் முந்தியுள்ளது என்கிறார்கள்.
தமிழகத்தில் ஓரிரு கோடிகள் வித்தியாசம் இருந்தாலும், வெளிநாட்டில் வாரிசு படம் துணிவு படத்தை விட அதிக கோடிகள் வித்தியாசத்தில் வசூல் செய்து வருகிறது.அதன்படி, வெளிநாட்டில் வாரிசு படம் ரூ. 75 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆனாலும், இதுவரை லாபத்தை கொடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
அதே சமயத்தில் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்து வரும் துணிவு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது என்றும், இதற்கு முன் வெளிவந்த அனைத்து அஜித் படத்தின் வசூல் சாதனையை துணிவு படத்தின் வசூல் முறியடித்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
இது தான் அஜித்தின் திரை வாழ்க்கையில் ஆல் டைம் பெஸ்ட் வசூல் சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!