தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஹெச் வினோத்.இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இவர் இயக்குநராக அறிமுகமாகினார்.இப்படத்தினைத் தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 11-ம் தேதி வெளியான திரைப்படம் தான் துணிவு.இப்படத்தின் ரிலீஸ் நாளில் தான் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது.இப்படங்கள் இரண்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினையும் பெற்று வருகின்றது.
உலக அளவில் அஜித்தின் துணிவு திரைப்படம் ரூ.160 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ.195 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இருப்பினும் வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 நாட்களில் வாரிசு திரைப்படம் 210 கடந்துவிட்டதாக இணையப்பக்கத்தில் அறிவித்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் ஹெச் வினோத், " பாக்ஸ் ஆபிஸ் கேம்மால் படத்தின் தயாரிப்பாளர்களும் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்" என்று கூறியுள்ளார்.இதனால் தளபதி ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
H Vinoth in a recent interview :
Because of this box office game few producers are forced to make a fake box office collection figures to promote their movies 😉👏👌
Direct kottu on bald head🤭 #Thunivu #Ajithkumar #BlockbusterTHUNIVU pic.twitter.com/y3JLbno653
Listen News!