• Sep 20 2024

தளபதி 68' படத்திற்கு முதலில் வாழ்த்துத் தெரிவித்தது அஜித் தானா?- வெங்கட் பிரபு சொன்ன சுவாரஸியமான தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக வலம் வருபவர் தான் விஜய். இவர் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது. இதனால் இப்படத்தின் வரவுக்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தின் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லியோ படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் 400 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் தளபதி 68 படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.


இந்த படத்தின் பூஜை முன்னதாக போட திட்டம் போட்ட நிலையில், லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் முட்டுக்கட்டை போட்டு விட்டதாக கூறப்பட்டது.இந்நிலையில், வெங்கட் பிரபு மற்றும் யுவன் காம்போ கன்ஃபார்ம் ஆன நிலையில், படத்தின் ஆடியோ உரிமம் லியோ படத்தின் ஆடியோ உரிமத்தை விட அதிகமாக விற்பனையாகி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.


இது ஒரு புறம் இருக்க தளபதி 68' படத்திற்காக முதலில் வாழ்த்து தெரிவித்தது நடிகர் அஜித் தான் என வெங்கட் பிரபு தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தளபதி ரசிகர்களிடையே பெரும் குஷியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement