தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் தர்ஷன். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தும்பா என்னும் படத்திலும் இவர் ஹீரோவாக நடித்திருந்தார்.
தொடர்ந்த படவாய்ப்புகள் கிடைக்காததால் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
முதல் சில வாரங்கள் நடுவர்களிடம் இருந்து பாராட்டை பெறாமல் இருந்த தர்ஷன், தற்போது சிறந்த குக் என்று நடுவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு பாராட்டும் அளவிற்கு வளர்த்துள்ளார்.
இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை பிரியங்கா மோகன், டான் பட ப்ரோமோஷனுக்காக கலந்துகொண்டனர்.
இதில், தனது நண்பர் தர்ஷன் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், 'முதலில் இந்த நிகழ்ச்சிக்கு போகமாட்டேன் என்று தர்ஷன் கூறினார். ஆனால், நான் தான், நீ போ என்று சொன்னேன். அங்கு சென்று அனுபவங்களை கற்றுக்கொள். இங்கு இருக்கும் கேமராக்களை எதிர்கொள். அப்போது தான், உனக்கு நிறைய விஷயங்கள் தெரியும்' என்று கூறினாராம் சிவகார்த்திகேயன்.
இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர தர்ஷன் சம்மதம் தெரிவித்துள்ளாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!