• Nov 14 2024

மணிரத்னம் அந்தக்காலத்து அட்லீயா? ஆதாரத்துடன் கிழித்து தொங்க விட்ட வலைப்பேச்சு

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆரம்பகால இருந்து இன்றளவிலும் தவிர்க்கமுடியாத சினிமா கலைஞர்களில் கமல்காசன் மற்றும் மணிரத்னம் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் இயக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமாவின் வரலாற்றில் இடம் பிடித்த திரைப்படங்கள் ஏராளம்.

90s கிட்ஸ் மட்டும் இன்றி 2k  கிட்ஸ் கூட விரும்பி பார்க்க கூடிய பல திரைப்படங்களை இயக்கி வருபவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் வரும் காதல் திரைப்படங்களுக்கென்றே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

 அதேபோல் அந்த காலத்திலேயே எதிர்காலத்தை நோக்கிய திரைப்படங்களை எடுக்க கூடியவர் கமல் காசன் பல புதிய தொழில்நுட்பங்கள் ,சினிமா நுட்ப முறைகள் என பலவற்றை அறிமுகம் செய்தவர் கமல்காசன்.


இந்தநிலையில்,  அட்லீ படங்களை கோப்பி பண்ணுவதாக கேலி பேச்சு பேசுபவர்கள், அந்த காலத்தில் மணிரத்தினமும், கமலும் ஆங்கில படங்களின் கோப்பியை தான் படமாக்கியா போதும் இவ்வாறு தான் கேலி பண்ணினார்களா? என வலைப்பேச்சு அந்தணனிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.


அதற்கு அவர் கூறுகையில், இன்று பல சமூக வலைத்தளங்கள் இருப்பதனால் அட்லீ போன்றவர்களை கேலி செய்கிறோம். ஆனால் அதே போன்றே மணிரத்னம் ,கமல் காசன் போன்றவர்களும் ஆங்கில படங்களை கோப்பி  அடிப்பவர்கள். ஆனால் அப்போது இந்த ஊடகங்கள் இல்லாததால் தெரியவில்லை. மணிரத்னம் அந்தக்காலத்து அட்லீ எனக் கூறியுள்ளார்.

கமல், மணிரத்தினம் போன்றவர்கள் ஆங்கில படங்களை கோப்பி அடிப்பதை வாடிக்கையாக கொண்டவர்கள் பாலச்சந்தரன்  தனது அசிஸ்டனை ஜப்பானுக்கு அனுப்பி படத்தை பார்த்து வர சொல்லி அதை கோப்பி  அடித்தே "அந்தநாள்" திரைப்படம் எடுக்கப்பட்டது என ஓபன் ஆக பல தகவல்களை கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement