கடந்த 2001ம் ஆண்டு தில் படத்திற்கு பாடல் வரிகள் எழுதியதன் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகியவர் தான் கபிலன்.இவர் எழுதிய சென்னை பட்டினம், சகலகலா வல்லவனே, ஆல் தோட்ட பூபதி நானடா, மச்சான் பேரு மதுர, மெர்சலாயிட்டேன், என்னோடு நீ இருந்தால், போன்ற இன்னும் பல பாடல்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன.
மேலும் இவருடைய மகள் தான் தூரிகை. முற்போக்கு சிந்தனையுடைய பெண்ணாக வலம் வந்த இவர் எடுத்த விபரீத முடிவு அவரது குடும்பத்தினைரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.அதாவது சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூரிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை பேரதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்த நிலையில் தூரிகையின் உடலை கைப்பற்றிய போலீசார், சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்துள்ளனர்.அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது தூரிகையை அவரது பெற்றோர் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியது தான் அவரது தற்கொலைக்கு காரணமா என்கிற கேள்வி போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தூரிகையின் பெற்றோர்களிடத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாடலாசிரியர் கபிலனின் மகள் வேறு யாரையாவது காதலித்து வந்தாரா? காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில், தான் இப்படியொரு முடிவை எடுத்து விட்டாரா என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேசி, போராடி தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சனைகளுக்கு எல்லாம் ஏன் தான் இந்த காலத்து இளைஞர்கள் உடனடியாக தற்கொலை முடிவை கையில் எடுக்கின்றனரோ என்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது.
எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எல்லாம் பதிவிட்டு மற்ற இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வந்த தூரிகை கபிலன் இப்படியொரு முடிவை எடுக்கும் அளவுக்கு அப்படி அவருக்கு என்ன பிரச்சனை என்கிற ரீதியிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!