• Nov 14 2024

‘பாகுபலி’ படத்திக்காக 400 கோடி பணம் வட்டிக்கு வாங்கப்பட்டதா..? வெளியான ஷாக்கிங் தகவல்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய மொழியில் வெளியாகி, பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களில் ஒன்று ‘பாகுபலி’. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு, பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம், பாக்ஸ் ஆபிஸில் புதிய வரலாறு படைத்தது. இதன் இரண்டு பாகங்களும் சுமார் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

குறிப்பாக இப்படத்தின், முதல் பாகம் 600 கோடியும், இரண்டாம் பாகம் 500 கோடியும் வசூல் செய்தது. இந்த படத்தின் வசூலை பற்றிய தகவல் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இந்த படத்தை எடுப்பதற்காக சுமார் 400 கோடி ரூபாய் அதுவும் 24 பர்சென்ட் முதல் 28 பர்சென்ட் வட்டிக்கு வாங்கப்பட்டதாக ஷாக்கிங் தகவலை தெரிவித்துள்ளார் ராணா டகுபதி.

சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்த தகவலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் ‘மூன்று-நான்கு வருடங்களுக்கு முன்பு படங்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் வீட்டையோ அல்லது அவருடைய சொத்தையோ வங்கியில் அடமானம் வைத்து அல்லது வங்கியில் கடன் வாங்கி தான் படத்தை எடுத்தார்கள். இதற்கு, 24 முதல் 28 சதவீதம் வரை வட்டி செலுத்தி வந்தனர். பாகுபலி போன்ற படங்களுக்கும் அதே போல் சுமார் 300-400 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டது.

‘பாகுபலி-1’ படத்திற்காக தயாரிப்பாளர்கள் 180 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும், ஐந்தரை வருடங்கள் இப்படம் எடுக்கப்பட்டது. அதன் வட்டி விகிதம் 24 சதவீதமாக இருந்தது. படத்தின் முதல் பாகம் தெலுங்கில் அதிக வசூல் செய்த படத்தை விட இரட்டிப்பு பணம் செலவு செய்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வட்டி பணத்தில் படத்தின் இரண்டாம் பாகத்தையும் படக்குழுவினர் எடுத்துள்ளனர். ஒருவேளை படம் வெற்றி பெறாவிட்டால் என்ன நடக்கும் என்று தயாரிப்பாளர்கள் யோசிக்கவே இல்லை என கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Advertisement

Advertisement