• Sep 20 2024

ஹேக் செய்யப்பட்டதா சமந்தாவின் இன்ஸ்டா; விளக்கமளித்த மேனேஜர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் தனது நடிப்புத் திறமையினால் கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை சமந்தா. இவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது 'மாஸ்கோவின் காவிரி' என்ற திரைப்படமாக இருந்தாலும், 'ஏ மாயா சேசவா' என்ற தெலுங்கு திரைப்படமே இவரின் நடிப்பில் முதன் முதலில் வெளியாகியது.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நடிகை சமந்தாவின் நடிப்பில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதீஜா என்ற கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுக் கொடுத்தது.

இதையடுத்து தற்போது சமந்தா நடிப்பில் 'யசோதா, சகுந்தலம்' ஆகிய படங்களின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கள் முடிந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அவற்றில் 'யசோதா' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 12-ஆம் திகதி ரிலீசாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து தெலுங்கில் 'குஷி' என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் சமந்தா. இப்படத்தில் அவரிற்கு ஜோடியாக விஜய் தேவர்கொண்டா நடிக்கிறார்.

இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்களும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவை மட்டுமில்லாது பாலிவுட்டிலும் ஒரு படம் மற்றும் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கின்றார். இவ்வாறாக கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பான் இந்தியா நடிகைகளில் ஒருவராக திரையுலகில் கலக்கி வருகிறார் நடிகை சமந்தா.

இவ்வாறாக பல மொழிப் படங்களில் பிஸியாக இருந்தாலும் இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இயங்கி வருபவர். புகைப்படங்கள், வீடியோக்கள் என பதிவிட்டு வருவதனால் இன்ஸ்டாகிராமில் 2 கோடிக்கும் அதிகமானோர் இவரை பாலோ செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இருக்கும் போது நேற்று இரவு சம்பந்தமே இல்லாத யாரோ ஒரு நபரின் புகைப்படம் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக நினைத்து குழம்பியிருந்தார்கள். இதானால் சமந்தாவின் மேனேஜர் இது குறித்த விளக்கம் ஒன்றினை அளித்திருந்தார். அதாவது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பதிவு தவறுதலாக பதிவாகி உள்ளது என்றும், பின்னர் அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement