• Sep 20 2024

’தி லெஜண்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இத்தனை கோடி செலவளித்து நடத்தப்பட்டதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல வர்த்தக நிலையமான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான லெஜண்ட் அருள் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ’தி லெஜண்ட்’.இப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் முடிவடைந்து தற்பொழுது இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது

. இதையடுத்து இணையத்தில் வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தின் ட்ரெய்லர் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரெய்லரின் பிரம்மாண்டத்தைப் பார்க்கும் ஒரு புதுமுக நடிகருக்கு இவ்வளவு செலவு செய்து படம் எடுத்துள்ளார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்காக மட்டும் சுமார் 6 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக கோலிவுட்டில் ஆச்சரயமாக சொல்லப்படுகிறது. நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள வந்த நடிகைகள் அனைவருக்கும் கணிசமான தொகை கொடுத்தே வரவழைக்கப் பட்டுள்ளார்களாம். இதனால்தான் இவ்வளவு தொகை காலியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement