உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகவுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தினை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதோடு இப்படத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தான் தயாரித்துள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படமானது ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது, ஏற்கனவே விக்ரம் ட்ரெய்லர் வெளியாகி வெறித்தனமான வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் விக்ரம் 2022, கடந்த 1986-ல் வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சி இல்லை என்றாலும், அதில் வந்த கதாபாத்திரத்தின் தொடர்ச்சி என்று தான் கூறப்படுகின்றது.
அப்போதே பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட விக்ரம் பெரிய வெற்றியடைந்தது. மேலும் பழைய விக்ரம் திரைப்படம் ரூ.1 கோடி பட்ஜெட்டில் உருவானதாம், ஆனால் அப்படம் ரூ.8 கோடி அளவில் வசூலித்ததாகவும் சொல்லப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!