தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் விஜய் தற்பொழுது தொடர்ச்சியாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
லியோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே அடுத்த படம் இயக்குநர் வெங்கட்பிரபு கூட்டணியில் என அறிவித்துள்ளார். வருகிற ஜூலை முதல் இதன் படப்பிடிப்பு துவங்கலாம் என கூறப்படுகிறது. இதுவரை வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் எந்த படத்திலும் நடித்ததில்லை.
எனவே இது ஒரு புது காம்போ என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கான கதை ஏற்கனவே எழுதப்பட்டது என பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறுகிறார். மாநாடு படத்தை வெங்கட் பிரபு எடுத்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு வெகுவாக நஷ்டமானது. மாநாடு படத்தின் படப்பிடிப்பையும் முடிக்க முடியவில்லை. எனவே இந்த இடைவெளியில் ஒரு வெப் சீரிஸ் எடுக்கலாம் என யோசித்தார் வெங்கட்பிரபு. இதற்காக ஒரு கதையையும் எழுதினார். சிம்புவிற்கு அந்த கதை பிடித்திருந்தது. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால் தயாரிப்பாளர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பொறுமையாக மாநாடு படத்தை இயக்கி கொள்வோம் என கூறிவிட்டார். அதனையடுத்து அந்த கதையை படமாக்கவில்லை. பிறகு அந்த கதையை தான் தற்சமயம் விஜய்க்கு ஒதுக்கியுள்ளார் வெங்கட்பிரபு என கூறியுள்ளார் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!