இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடிகர் விஜய்தேவர்கொண்டா நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் பெற்ற திரைப்படம் தான் அர்ஜுன் ரெட்டி. இப்படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு ஆபிசில் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் கதாநாயகியாக ஷாலினி பாண்டே நடித்திருந்தார்.இப்படத்தின் மூலம் விஜய்தேவர்கொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகிய இருவரும் பிரபல்யமாகி இருக்கின்றனர்.அத்தோடு இப்படம் தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக் செய்து திரையிடப்பட்டது.
என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பார்வதி நாயர். மேலும் இவர் பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் பார்வதி நாயர் சினிமா அனுபவத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், "எனக்கு அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்படத்தில் நிறைய முத்த காட்சிகள் இருந்ததால் நான் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டேன்.
அதன் பின் அர்ஜுன் ரெட்டி திரையரங்குகளில் வெளியாகும் போது பார்த்தேன். இந்த மாறி படத்தை மிஸ் செய்துவிட்டதை நினைத்து வருந்தினேன். இப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி அருமையாக படத்தை இயக்கி இருந்தார்" எனக் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!