பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படுதூளாக நடந்து வருகிறது.
ஏற்கனவே வாரிசு படத்தில், இடம்பெற்ற மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், சம்யுக்தா, குஷ்பு என பலர் நடித்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தற்போது சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் படு பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.இதில் விஜய் என்ட்ரி கொடுத்த வீடியோ எல்லாம் வெளியாகியது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகர் ஷ்யாம் பேசும்போது, பிரகாஷ் ராஜ் அவர்கள் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் படத்தின் பட்ஜெட் ரூ. 60 கோடி என கூறப்பட்டது, ஆனால் படத்தின் முடிவில் ரூ. 80 கோடி வந்தது.அப்போதும் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் படம் நன்றாக வர வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார் என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!