• Nov 19 2024

கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் சாமி தரிசனம் செய்த நடிகர் அஜித்- ரசிகர்களுடன் எப்படி நிற்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!


கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் நடிகர் அஜித் சாமி தரிசனம் செய்துள்ளதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தற்பொழுது ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளுக்கு தனது பைக்கில் சுற்றுப் பயணம் மேற் கொண்டு வந்தார். இதனை அடுத்து தான் நடித்து வரும்  AK61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.


 பின்னர் படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டு , தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. 


பின்னர் அஜித், தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக்,லே & கார்கில் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.இந்நிலையில் இன்று நடிகர் அஜித், உத்தரகண்ட் மாநிலத்தின் இமயமலையில் அமைந்துள்ள கேதர்நாத் & பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.


 கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது





Advertisement

Advertisement