நடிகர் பாபி சிம்ஹா கொடைக்கானல் பேத்துப்பாறை ஊராட்சியில் உள்ள சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் சொகுசு வீடு இன்றை கட்டிவருகிறார். இதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஜமீர் என்பவரிடம் பங்களா கட்டுவதற்கு ஒரு கோடியே ஐம்பது லட்ச ரூபாயில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் முறையாக கட்டடப்பணிகள் மேற்க்கொள்ளப்படவில்லை என்று பாபிசிம்ஹா ஆவேசம் அடைந்தார்.
பாபி சிம்ஹா இதுதொடர்பில் ஜமீர் என்பவரிடம் வினவியபோது இருவருக்கும் இடையில் தகராறு ஏடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனிடையே முறையாக அனுமதி பெறாமல் வீடுகட்டிய புகார் தொடர்பில் அரச அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து நோட்டிஸ் வழங்கிய நிலையில் பாபி சின்ஹா தரப்பினர் தகுந்த ஆதாரங்களை சமர்பித்திருந்தனர். மேலதிகமாக பணம் கேட்டதாக கூறி ஜமீர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் முறைப்பாடு செய்து இருந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதன் பின்பு புதிதாக கட்டப்படும் வீட்டிற்கு வக்கீலுடன் சென்ற பாபி சிம்ஹா முறையாக எந்தப்பணிகளையும் மேட்கொள்ளவில்லை என புகார் அளித்துள்ளார். 90 சதவீதம் வேலை முடிந்ததாக ஒப்பந்தக்காரர்கள் கூறினார்கள் நீங்களே பாருங்கள் ஒருங்காக ஒருவேளையும் முடியவில்லை என ஆவேசம் பொங்க கத்தினார். ஒழுங்காக விசாரிக்காமல் ஒப்பந்தம் வழங்கியது என்னுடைய தவறுதான்.
அவர் காட்டிய கட்டிடமாதிரியை பார்த்து சரி என்று ஒப்பந்தம் செய்தேன். ஆனால் தற்போது வேலை ஒழுங்காக நடைபெற வில்லை ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன. இந்த பணமோசடியை அதிகாரிகள் விசாரித்து தீர்வு வழங்கவேண்டும் என்பதே அவரின் கருத்தாக அமைந்தது.
Listen News!