• Nov 14 2024

100 தடவை பார்த்திட்டேன் பிளீஸ் எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாங்க- விஜய் சேதுபதியுடன் ரொமன்ஸ் பண்ண ஆசைப்படும் ஜான்வி கபூர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர்,மிக குறுகிய காலத்தில், பாலிவூட் திரையுலகின் முன்னணி நாயகி பட்டியலில் இணைந்துள்ளார். தன்னுடைய அம்மாவின் பாணியிலேயே கதைக்கு முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 

இதனால் அண்மையில் நடிகை நயன்தாரா நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'கோலமாவு கோகிலா' படத்தின் ஹிந்தி ரீ-மேக்காக எடுக்கப்பட்ட 'குட்லக் ஜெர்ரி' படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பாலிவூட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.


இதை தொடர்ந்து , மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் ஹிந்தி ரீ-மேக்காக எடுக்கப்பட்ட மிலி படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்திலும் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்ட பட்டது. இந்த படம் தமிழில் 'அன்புக்கினியால்' எங்கிற பெயரில் வெளியானது.

தொடர்ந்து பாலிவுட் படங்களில் மட்டுமே ஜான்வி கபூர் கவனம் செலுத்தி வரும் நிலையில்,நடிகர் விஜய் சேதுபதிக்கு போன் செய்து பேசியதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அதாவது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'நானும் ரவுடி தான்' திரைப்படத்தை, 100 ஆவது முறையாக ஜான்வி பார்த்து விட்டாராம்.


எனவே இதனால் தான் விஜய் சேதுபதிக்கு போன் செய்து நான் உங்களின் தீவிர ரசிகை. உங்களுடைய படத்தில் ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் நான் ஆடிஷனில் கலந்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி மிகவும் ஐயோ என ஆச்சர்யப்பட்டு போயுள்ளார்.ஒரு வேலை இப்போது வெளியான இந்த தகவல் உண்மையானதாக இருந்தால், விரைவில்... ஜான்வி கபூர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  



Advertisement

Advertisement