சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியிக்கின்றது. இதனால் மக்கள் எல்லோரும் பல இடர்களை சந்தித்து வருகின்றனர். குடியிருப்புக்குள் மழை புகுந்து விட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்நிலையில் பல பிரபலங்களும் மக்களுக்கு தாவல்களை வழங்கி வரும் நிலையில் நடிகர் விஷால் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் நடிகனாக இல்லாமல் பொதுமக்களாக கேட்கின்றேன் 'மழை நீர் வடிகால் என ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பிச்சு முடிசீங்களே. அது சென்னைக்கு தானா இல்லை சிங்கப்பூருக்கு செஞ்சீங்களா' என கேட்டிருக்கிறார்.
Dear Ms Priya Rajan (Mayor of Chennai) and to one & all other officers of Greater Chennai Corporation including the Commissioner. Hope you all are safe & sound with your families & water especially drainage water not entering your houses & most importantly hope you have… pic.twitter.com/pqkiaAo6va
'நான் அண்ணா நகரில் தங்கி கொண்டிருக்கிறேன், இங்கேயே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து இருக்கிறது. மற்ற இடங்களில் நிலைமை எப்படி இருக்கும்.' 2015,ல் வெள்ளம் வந்த போது மக்கள் எல்லோருக்கும் உதவினோம், ஆனால் தற்போது 8 வருடங்கள் கழித்து அதை விட மோசமான நிலை தான் வந்திருக்கிறது.
இதை நினைக்கும் போது ரொம்ப கேவலமாக இருக்கு, எங்க வீட்டில கூட வயது போனவங்க இருக்கிறாங்க, நிறைய வீடுகளில் சின்ன குழந்தைகள் இருக்கிறாங்க இதற்கு மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏக்கள் வெளியில் வந்து மக்களுக்கு உதவ வேண்டும். என விஷால் கேட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு சென்னை மேயர் ப்ரியா விஷால் போட்ட பதிவுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
சுமார் 6 லட்சம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கியிருக்கிறோம். வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும், அரசு நிறைவேற்றித் தரும் என பதிலடி கொடுத்துள்ளார்.
Listen News!