• Nov 12 2024

சட்டரீதியாக சந்திக்க ரெடி-சிறைத்தண்டனை குறித்து இயக்குநர் லிங்குசாமி வெளியிட்ட அறிவிப்பு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநரான லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், கடந்த 2014 ஆம் ஆண்டு 'எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை தயாரிப்பதற்காக, பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது.

மேலும் இந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதால் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவத்திற்கெதிராக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட் பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்தமாறு இயக்குநர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டது.எனினும் இதையடுத்து இயக்குநர் லிங்குசாமி, 1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனத்திடம் வழங்கினார்.

ஆனால் அந்த காசோலைகள் பணம் இன்றி திரும்பியதால் பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் லிங்குசாமிக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.மேலும் இவ் வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த சம்பவம் பெரும் ரசிகர்களிடத்தே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இயக்குநர் லிங்குசாமி இதுகுறித்து அறிக்கை மூலம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, " இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னை பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை.

மேலும் இந்த வழக்கு பிவிபி கேப்பிடல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது.

 அவர்கள் தொடுத்த வழக்கின் மேல் இன்று மாண்மிகு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் இன்று மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மேல் முறையீடு செய்து சட்ட ரீதியாக சந்திக்க உள்ளோம்". இவ்வாறு லிங்குசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


 

Advertisement

Advertisement