தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் நடிகை மீனா.தொடர்ந்து ராஜ்கிரன் நடிப்பில் வெளியாகியிருந்த என் ராசாவின் மனசிலே என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இதனை அடுத்து ரஜினி,கமல்ஹாசன், அஜித், பார்த்திபன், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி ஹீரோக்களுடன் களமிறங்கிய மீனாவிற்கு அனைத்து படங்களும் ஹிட்டாகவே அமைந்தது.
தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார் மீனா.தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டில் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்தார் இவருக்கு நைனிகா என்ற பெண் குழந்தைம் உள்ளது. கடந்த ஆண்டு தான் மீனாவின் கணவர் இறப்புக்குள்ளானார்.
இந்நிலையில் மீனா திரையில் நடிக்கத் துவங்கி 40 ஆண்டுகளை கடந்துள்ளார். இதைக் கொண்டாடும் வகையில் அவரது திரையுலக நண்பர்கள் மீனா 40 என்ற நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். விரைவில் நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த நிகழ்ச்சி குறித்து கலா மாஸ்டர் ஒரு வீடியோப் பதிவினைப் போட்டுள்ளார். அதில் ஒரு பெண் 40 வருடங்கள் சினிமாவில் இருப்பது இலகுவானதல்ல. மீனாவுக்கு சர்ப்போட் பண்ணிய அனைவருக்கும் நன்றி தொடர்ந்து அவளுக்க சர்ப்போட் பண்ணிட்டே இருங்க என்று கேட்டுள்ளதோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!