தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக பல ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் கலக்கப் போவது யாரு சாம்பியன் சீசன் 4 நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து ஒவ்வொரு வாரமும் கெஸ்டாக பலர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமான ஜனனி அமுதவாணன் தனலக்ஷ்மி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இப்படியான நிலையில் ஜனனி வந்த போது அசார் சிம்பு வாய்சில் பேசினார். அதே போல சிம்பு வாய்சில் பேச ஆரம்பித்த ஜனனி நடுவர் ஸ்ருதியை வச்சு செய்துள்ளார். அதாவது அமுதவாணன் ஒருமுறை வந்தபோது ஸ்ருதி ஜனனியைக் காதலிக்கிறீங்களா என்று அமுதவாணனிடம் கேட்டிருந்தார். அதைத் தான் நக்கலாக பேசியுள்ளார்.
அதாவது ஷீட்டிங் வந்தோமா எல்லார் கிட்டையும் கலகலப்பாக பேசினோமா பேமன்ட்டை வாங்கி பாக்ல போட்டோமா என கிளம்பி போயிட்டே இருக்கணும்.எதற்கு இந்த பேச்சு என நக்கலாக சொல்ல ஸ்ருதி ஐயோ என்னை மன்னிச்சிருமா என சொல்கின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றதைக் காணலாம்.
Listen News!