வலிமை படத்தினைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் 'துணிவு'. வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது படமான துணிவு படத்தையும் போனி கபூர் தான் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார்.
மேலும் இவர்கள் கூட்டணியில் உருவான நேர்கொண்டப்பார்வை வெற்றிபெற்ற நிலையில் வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே துணிவு படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கும் முனைப்பில் இருக்கின்றார் அஜித்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் பணிகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அஜித்தின் துணிவு படமும் விஜய்யின் வாரிசு திரைப்படமும் ஒரே நேரத்தில் தான் ஆரம்பமானது. அதேபோல் இவ்விரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாக போகின்றது. இதையடுத்து ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.
அத்தோடு கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் நேரடியாக மோதவுள்ளன. கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஜில்லா மற்றும் வீரம் ஆகிய படங்கள் வெளியாகின. அதன் பிறகு தற்போது வாரிசு மற்றும் துணிவு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் நேற்று துணிவு படத்தின் ட்ரைலர் வெளியானது. பலரும் எதிர்பார்த்ததை போல இப்படம் வங்கி கொள்ளை சம்மந்தப்பட்ட படமாக இருக்கும் என்பது ட்ரைலரை பார்த்தவுடனே தெரிந்தது. என்னதான் அஜித் ரசிகர்கள் இந்த ட்ரைலரை பலவாறாகக் கொண்டாடினாலும் விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுவான ரசிகர்கள் இந்த ட்ரைலர் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றே விமர்சித்து வருகின்றனர்.
அதாவது இந்த ட்ரைலர் அப்படியே விஜய்யின் பீஸ்ட் பட ட்ரைலர் போலவே இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். எனவே துணிவு ட்ரைலர் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதால் வாரிசு படத்திற்கு அது சாதகமாக அமையும் என சில விஜய் ரசிகர்கள் பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!