இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.
விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
.தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி, சூரி, இசைஞானி இளையராஜா, எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசிக்கொண்டிருந்த போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ஆராவாரம் செய்து கூச்சலிட்டனர். அப்போது,"கத்தாத, மைக்கை கொடுத்துட்டு போய்டுவேன்" என இளையராஜா சற்றே கோபமான குரலில் சொன்னார்.
இதனையடுத்து அங்கிருந்த இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் அமைதியாக இருக்கும்படி ரசிகர்களுக்கு சைகை செய்தனர். பின்னர் அமைதி திரும்பவே இளையராஜா தனது பேச்சை தொடர்ந்தார்.அவர் போன பிறகு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், கூட்டத்தில் இருந்து தலைவா என ரசிகர்கள் ஆர்ப்பரித்ததை பார்த்து, “எல்லாருக்கும் வணக்கம். நான் அண்மையில் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறேன், நடிகர்களை தலைவா என சொல்வது ஏற்புடையதல்ல என சொல்லி இருந்தேன், நடிகர்களுக்கு அதுதான் என்றால், இயக்குநர்களுக்கு அதை விட அதிகம்.!” என கூறினார்.
Listen News!