• Nov 10 2024

எங்களுக்குள்ள அப்படி ஒன்றும் இல்ல நட்பு மட்டும் தான் இருந்தது- ராபர்ட் மாஸ்டரை மோசமாக கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கியது. மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6, 50 நாட்களை கடந்துள்ளது. இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறிவிட்ட நிலையில், சென்ற வாரம் ராபர்ட் மாஸ்டரும் எவிக்சன் செய்யப்பட்டார்.


 முதல் இரண்டு வாரங்கள் ஆக்டிவாக இருந்த ராபர்ட் மாஸ்டர், அதன் பின்னர் அப்படியே மந்தமாகிவிட்டார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு சேனல்களிலும் பேட்டியளித்து வருகின்றார்.பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டருடன் அமுதவாணன், ரச்சிதா, குயின்ஷி மூவருமே மிக நெருக்கமாக பழகி வந்தனர். 

அதிலும், ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா இடையேயான கெமிஸ்ட்ரி எல்லை மீறி பொங்கியது. சில இடங்களில் இருவரும் கண்களால் மட்டுமே பேசிக் கொண்டனர். ரச்சிதாவும் ராபர்ட் மாஸ்டர் வெளியேறியதை நினைத்து வருத்தத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவுடனான உறவு குறித்தும் தனது இன்ஸ்டா வீடியோவில் பேசியுள்ளார்.


ரச்சிதாவுடன் நட்பாக மட்டுமே பழகினேன், எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மட்டுமே இருந்தது. அதை நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது என பேசியுள்ளார். ராபர்ட் மாஸ்டரின் இந்த பதில் நம்புற மாதிரியா இருக்கு என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டரிடம் பேசிய கமல், "உங்கள் மீது நிறைய நம்பிக்கை வைத்திருந்தேன், கடைசி வர போட்டியில் இருப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement