• Sep 20 2024

குடும்ப கஷ்டத்துக்காக குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்த்து விட்டோம்- ஆர்ஜே பாலாஜி கூறிய அதிர்ச்சித் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வருபவர் தான் ஆர்ஜே பாலாஜி .மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் மூலம் கவனிக்கப்படும் நடிகராக மாறிய இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் வீட்ல விசேஷம். இப்படத்தை ஆர்ஜே பாலாஜி மற்றும் என்ஜே சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர்.

வயசான காலத்தில் அம்மா கர்ப்பமாகும் அம்மா இதனால் ஏற்படும் பிரச்சினைகளையே இப்படம் எடுத்துக் காட்டுகின்றது. இப்படம் வெளியாகிய நாளிலிருந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் இப்படத்தின் கதை எல்லாம் கிட்டத்தட்ட ஆர்ஜே பாலாஜி ரியல் லைஃப்பிலேயே நடந்துள்ளதாக கூறியுள்ளார்

அதாவது சாதாரண அதுவும் ரொம்பவே கஷ்டப்படுற ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து ஆர்ஜே, காமெடி நடிகர், ஹீரோ, இயக்குநர் என உயர்ந்திருக்கிறார். ஆர்ஜே பாலாஜிக்கு ஒரு தம்பியும் மூன்று தங்கச்சிகளும் உள்ளனர். அவரது அப்பா மூக்குத்தி அம்மன் படத்தில் வரும் அப்பாவை போலவே குடும்ப பொறுப்பை விட்டு சில காலம் ஒதுங்கி விட்டதாகவும், அதன் காரணமாக அடிக்கடி சென்னையின் பல இடங்களில் வாடகை வீட்டை மாற்றி இருக்கிறோம் என பழைய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது குடும்பத்தை பற்றிய மேலும், சில ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றிலும் கூறியிருக்கிறார்.மூன்று ஆண்டுகளுக்கு ஒரு புதுப்படம் ரிலீஸ் ஆவதை போல எங்கள் வீட்டில் ஒரு புதிய குழந்தை பிறக்கும். அதனால், நான் கல்லூரி படிக்க அட்மிஷன் வாங்கும் போது கைக் குழந்தையுடன் எங்கம்மா வந்ததை பற்றி எனக்கு எந்த கவலையும் பெரிதாக தெரியவில்லை. எங்க வீடே ஒரு அம்யூஸ்மென்ட் பார்க் மாதிரி தான் இருக்கும் என தனது சோகங்களை மறைத்துக் கொண்டு சந்தோஷமாக பேசி உள்ளார்.

ஆர்ஜே பாலாஜிக்கு திருமணம் ஆகி அவரும் அவரது மனைவியும் குடும்ப கஷ்டத்தை நினைத்து 5 ஆண்டுகளுக்கு குழந்தையை பெற்றுக் கொள்வதை தவிர்த்து விட்டனர். ஆனால், திடீரென ஆர்ஜே பாலாஜியின் தாத்தா இறந்ததும் மனைவிக்கு குழந்தை நின்று விட்டதாம். தாத்தா தான் குழந்தையா வராருன்னு நினைச்சி பெத்துக்கிட்டோம். ஆனால், அந்த கர்ப்ப கால நாட்கள் எங்களுக்கு பெரும் சோதனையாகவே அமைந்தது என்றும் பேசி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement