• Nov 17 2024

உன்னை நாங்கள் அதிகம் மிஸ் செய்கிறோம்- சின்ன வயசில நடிகை குஷ்புவின் மகள் எப்படி இருக்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பு. இவர் ரஜினி, கமல், விஜய், பிரபு, சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார்.இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.அத்தோடு இவர் பிரபல இயக்குநரான சுந்தர்.சியைத் திருமணம் செய்திருப்பதோடு இவர்களுக்கு இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.


இந்நிலையில், தனது மகள் அவந்திகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, குஷ்பு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. அத்தோடு தனது கேப்ஷனில், "22 ஆண்டுகளுக்கு முன்பு எங்களின் வாழ்க்கையில் நீ வந்தாய். எங்கள் வாழ்க்கையும் இதனால் அழகாக மாறியது. 22 வருடங்களுக்கு பிறகும் நீ அதனை தொடர்ந்து செய்து வருகிறாய்.


 நீ அழுவதை முதல் முதலாக நான் கேட்டது முதல் இன்று வரை, நீ எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளாய். நீ எனது வாழ்வையும் அழகாக ஆக்கி விட்டாய். உன்னை நேசிக்கிறேன் Beabu. நீ தொலைவில் இருப்பதால் உன்னை நாங்கள் அதிகம் மிஸ் செய்கிறோம்" என நெகிழ்ந்து போய் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவந்திகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குஷ்பு - சுந்தர் சி தம்பதியரின் மகளான அவந்திகா, வெளிநாட்டில் தங்கி படித்து வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement