பாலிவூட் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் அமீர் கான். இவர் தற்பொழுது இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கும் லால் சிங் சத்தா என்னும் படத்தில் நடித்து இந்த படத்தை அமிர்கானே தயாரித்து, அவரே நடித்து வருகிறார்.
இப்படத்தில் கரீனா கபுர் கான், மோனா சிங், சைதன்யா அக்கினேனி உள்ளட்ட பலர் நடித்திருக்கின்றனர்.'Forrest Gump'படத்தின் ரீமேக்காக உருவாக்கப்பட்டு வரும் இந்த படம் ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் தற்போது நடந்து வருகிறது.ஆகஸ்ட் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய அமீர்கான் உறுதியாக உள்ளார்.
தற்போது நடந்து வரும் இறுதிக்கட்ட ஷுட்டிங்கில், தொடர்ந்து நீண்ட துரம் ஓடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அதிக நேரம் தொடர்ந்து ஓடியதால் அமீர்கானுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஃபிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருந்தாலும் இதுவரை பெயின் கில்லர் மருந்துகள் எதையும் எடுக்க மறுப்பு தெரிவித்து வருகிறார் அமீர்கான். பெயின் கில்லர்களை தவிர்ப்பது மட்டுமில்லாமல், வலியுடன் தொடர்ந்து ஓடி நடித்து வருகிறார். ஏற்கனவே Mr.Perfectionist என அனைவராலும் பாராட்டப்படுபவர் அமீர்கான், வேலையில் தான் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருப்பவர் என்பதை மீண்டும் அவர் நிருபித்துள்ளார்.
சமீபத்தில் அஜித் தான் வலிமை ஷுட்டிங்கின் போது, பைக்கில் சென்று விழும் காட்சிகளில் ரத்த காயம் ஏற்பட்ட போதும் விடாமல் நடித்தார். அதுவும் ஆபத்தான சீன்களிலும் டுப் போட மறுத்து தானே நடித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அமீர்கான் அஜித்தையே மிஞ்சி விடும் அளவிற்கு கடின உழைப்போடு நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
நயன்தாராவின் 75 படத்தில் இப்படி ஒரு டுவிஸ்ட் இருக்கா?-மாஸ்டர் பிளான் தான் போட்டிருக்கிறாங்க
- சிம்புவுக்கு ஒரே ஒரு போன் செய்தேன்…” ஹன்சிகா கூறிய விசயம்..!
- குஷ்பு ரசிகர்களுக்கு வெளியான சோக செய்தி..!
- ஹீரோவாக என்றி கொடுக்கவுள்ள ஆர்யன்-எந்த தொடர் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!