• Sep 20 2024

உங்கள் அனைவரின் அன்பும் எங்களுக்கு வேண்டும்- விருமன் படம் குறித்து சூர்யா போட்ட முக்கிய பதிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

கொம்பன் பட இக்குநரான முத்தையாவுடன் கார்த்தி இரண்டாம் முறையாக கூட்டணி அமைத்து இன்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் விருமன். மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய இப்படத்தில் கதாநாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார்.

இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. மதுரை பின்னணியில் கிராமப்புற பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ், சூரி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், மேலும் இசையமைப்பாளர் படத்தில் வெளிப்படுத்த ஒரு சிறப்புப் பாடல் இருப்பதால் படம் முழுவதும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் கார்த்தியின் #விருமன் ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்காக இருக்கும், நீண்ட காலத்திற்கு நினைவில் இருக்கும் என்று நம்புகிறோம்..! அதிதி சங்கருக்கு சிறப்பான வரவேற்பு!! உங்கள் அனைவரின் அன்பும் எங்களுக்கு வேண்டும்!!! என்று சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement