தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள பசுமலை தேரி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. சீமான், மணிரத்தினம், வசந்த, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். மேலும் பல்வேறு திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர்.
சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த மாரிமுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முதல் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு திரையுலகினர் அஞ்சலி செலுத்திய நிலையில் மாலையில் அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு ஏராளமானோர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது கிராமமான பசுமலைதேரிக்கு எடுத்து செல்லப்பட்டது. சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் நின்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 6 மணி அளவில் அவரது வீட்டிற்கு முன்பு மாரிமுத்துவின் உடல் வைக்கப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாரிமுத்துவின் உடல் அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் எதிர் நீச்சல் சீரியலைப் பார்த்து வரும் ரசிகர்கள்,இவ்வளவு காலமும் இந்த சீரியலை மாரிமுத்துவுக்காகத் தான் பார்த்திட்டு இருந்தோம்.. இவரது கம்பீரமான குரலை கேட்டு பழகிடுச்சு இனிமேல் அவர் இல்லை என்று சொல்லும் போது அந்த சீரியலை பார்க்க மனமில்லை.இனிமேல் அந்த சீரியலைப் பார்க்கமாட்டோம்.அவருக்கு பதிலாக யாரைக் கொண்டு வந்து நடிக்க வைத்தாலும் அவர் போல வராது, அதனால் அந்த சீரியலை நாங்க பார்க்கப் போவதில்லை என ரசிகர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!