தமிழ் சினிமாவில் உதவி இயக்குநர், நகைச்சுவை, குணசித்திர நடிகர் என பல பரிமாணங்களை கொண்டவராக விளங்குபவர் தான் தம்பி ராமையா.இவர் நேற்றைய தினம் ஜிவி-2 பட விழாவில் கலந்துக்கொண்டார்.இவருடன் இந்த விழாவில் இயக்குநர் பாக்கியராஜ், சீமான், சுரேஷ் காமாட்சி உள்ளைட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய தம்பி ராமையா ஜிவி-2 படம் உயரத்தை தொடுமா என சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் தயாரிப்பாளருக்கு துயரத்தை தராது என்று தாராளமாக சொல்லலாம்.ரேஷ் காமாட்சி தயாரிக்கும் ராஜா கிளி மூலம் மீண்டும் இயக்குநராக மாறியுள்ளேன்.. அதனால் இனி நிறைய படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன்" என்று கூறினார்.
அதன்பின்னர் சீமான் பேசும்போது, "ஆஹா ஓடிடி தளத்தை தமிழிலும் கொண்டுவர வேண்டுமென அவர்கள் நினைத்ததற்காகவே அவர்களை பாராட்டலாம். எல்லோருக்கும் பிரியாணி சாப்பிடத்தான் ஆசை. ஆனால் கூழ் தானே கிடைக்கிறது. தம்பி சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகாவிட்டாலும் கூட ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு கூட 10 கோடி, 20 கோடி என அரசுகள் போட்டி போட்டு பரிசு வழங்குகின்றனர். ஆனால் விருது வென்று வரும் படைப்பாளிகளுக்கு பாராமுகம் காட்டுகின்றனர். சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்தும்போது ஏன் திரைப்படத்தையும் தயாரிக்கக் கூடாது.. நிச்சயமாக ஒருநாள் திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்படும்.. அந்த நாளும் வரத்தான் போகிறது" என்று கூறினார்.
மேலும் 'தம்பி ராமையா இங்கு பேசியது போல அவர் படங்களில் நடிப்பதை குறைக்கக் கூடாது. அப்படி செய்தால் அவர் வீட்டு வாசலில் முற்றுகையிடுவோம்" என்று அன்புடன் எச்சரிக்கை விடுத்தார். இவரின் இந்தக் கோரிக்கையைக் கேட்டு அனைவரும் சிரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!