• Nov 14 2024

என்னடா இது ஏ.ஆர் ரஹ்மானுக்கு வந்த சோதனை...இப்படியா நடக்கனும்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானதில் இருந்தே அனைவரது வரவேற்பையும்  அதிகம் பெற்று வருகிறது. இப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சக்கைபோடு போட்டு கொண்டிருக்கிறது.

பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படங்களில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளது.அத்தோடு  இந்தியாவில் நான்கு நாட்களில் ரூ. 100 கோடியைத் தாண்டியது. சிறிய சரிவைக் சந்தித்தாலும் உலகளவில் ரூ.200 கோடியைத் தாண்டியுள்ளது.

இவ்வாறுஇருக்கையில் , பொன்னியின் செல்வன் 2 படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஒரு பாடல், திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.அத்தோடு  துருபத் பாடகர் உஸ்தாத் வாசிபுதீன் தாகர் என்பவர் பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலான வீர ராஜா வீராவின் ட்யூன், தனது தந்தை மற்றும் மாமாவின் சிவ ஸ்துதியிலிருந்து எடுக்கபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.


மேலும் இப் படத்தின் தயாரிப்பாளர்களால் அனைத்து குற்றச்சாட்டுகளும் மறுக்கப்பட்டதாகவும், தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் குற்றச்சாட்டுகளை மறுத்ததாகவும், வீர ராஜா வீரா டகர் பிரதர்ஸ் இசையமைப்பின் நகல் அல்ல என்பதை உறுதிப்படுத்தியதாகவும் அறிக்கை  தெரிவிக்கிறது.

எனினும் இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வாசிபுதீன் பணம் மற்றும் விளம்பர ஆதாயத்துக்காக குழப்பத்தை உருவாக்கி உள்ளார்.  அத்தோடு வீர ராஜா வீர என்பது 13 ஆம் நூற்றாண்டில் நாராயண பண்டிதாச்சாரியானால் உருவாக்கப்பட்ட ஒரு பாரம்பரிய இசையமைப்பாகும்” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த காப்பி சர்ச்சை சினிமா வட்டாரம் மற்றும் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement