சமீபத்தில் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சிக்கிய TTF வாசன் வழக்கு விசாரணைக்காக காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர் . அப்போது விபத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தை திரும்ப பெறும் வழக்கில் விசாரணையை 14ம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, யூடியூப் சேனலை முடக்குவதக்கான வழக்கை வரும் 27ம் திகதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு விட்டார் .
பின்னர் செய்தியாளரை சந்தித்த T T F வாசன் ஓரிரு தினங்களில் புதிய வணிகம் தொடங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் . கையொப்பம் போட வரவில்லை .இங்க இருந்து போய்ட்டு வர ரொம்ப அலைச்சலா இருக்கு .அது மட்டும் தான் ரொம்ப பிரச்சனையா இருக்கு .என்னுடைய நாள் முழுதும் போயிடுது .பிஸ்ன்னஸ் ஆரம்பிக்க போறன் .
TTF ஆட்டோ மொபைல் பிரைவேட் லிமிடெட் எண்டு ஒரு கம்பனி ஆரம்பிச்சி இருக்கம் .எங்கட கம்பனிட மோட்டிவ் எப்பிடியென்றால் ரொம்ப தரம் வாய்ந்த ஒரு பொருள மலிவான விலையில் கொடுக்கனும் .அது தான் இவ்வளவு பிளான் போய்ட்டு இருக்கு என TTF வாசன் செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.
Listen News!